Tuesday, June 3, 2008

கீழே உள்ள பின்னூட்டம் சந்திப்பின் பதிவில் இடப்பட்டுள்ளது, இதற்கு சந்திப்பு பதிலளிக்க வேண்டும்.

http://santhipu.blogspot.com/2008/05/blog-post_31.html@@@@////இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகள் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனை இடதுசாரிப்பாதையில் கொண்டு சென்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயல்கிறது.//இந்தியாவில் அமலப்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகளை அப்படியே கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் அமல்படுத்துவது எந்த பாதை என்று விளக்கினால் சிறப்பாக இருக்கும்.மேலும் இந்த பொருளாதார கொள்கைகளினால் ஏற்படும் மக்களின் வெறுப்பை இடது சாரி பாதையில் திருப்புவதைத்தான் நந்திகிராம், சிங்கூரில் செய்தீர்களா என்பதையும் விளக்க வேண்டும்.பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியடைந்த பின்பும் கூட அதே நாசகர பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதை நாங்கள் செய்வோம் என்று CPM தலைவர்கள் சொல்லி வருவதுதான் இடதுசாரி பாதையா என்றும் விளக்க வேண்டும்.@@@@

1 comment:

ஏகலைவன் said...

1. சந்திப்பின் பதிவிலிருந்து: //திருத்தல்வாதத்தை எதிர்த்து பொதுவுடமை இயக்கத்தினுள் 12 ஆண்டுகளாக நடந்த நீண்டப் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமாவதற்கு காரணமாக அமைந்தது.//

தோழர் prognostic: அந்த திருத்தல்வாத ரகசியத்தை கொஞ்சம் விளக்கினா புண்ணியமாப் போகும். ஏன்னா இது ரொம்ப புது விசயமா இருக்கு? எந்த அம்சத்துல உங்களுக்கும் அந்த திருத்தல்வாதிகளுக்கும் வித்தியாசம்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமமா இருக்கு.
***************************************

பின்வரும் பின்னூட்டம் சந்திப்பின் முந்தைய பதிவில் அதே தோழர் எழுப்பிய கேள்விகள்தான்.

2. //எனக்கு இன்னொரு கொஸ்டீன் இருக்கு சந்திப்பு... அது யாருய்யா அது பெருமுதலாளி? அவன் ஏன் பன்னாட்டு மூலதனம் இந்தியாவை கொள்ளையடிக்க உதவனும்? அவன் உதவலேனே அவனை விட பெரிய சக்தியா இருக்குற வேற யாரு உதவுறது?//

prognostic: அப்படியே இந்த கொஸ்டீனுக்கும் பதில் சொல்லிறுங்க... பதில் சொல்வீங்கள இல்ல வழக்கம் போல புரட்சிக்காரர் தோழர் சந்திப்பு விடை தெரியா கேள்விகள் லிஸ்டில் இதுவும் சேந்துவிடுமா?

தோழர் prognostic என்பவரின் பல கேள்விகளோடு மேற்கண்ட கேள்விகளுக்கும் சந்திப்பு பதில் சொல்லவில்லை.

ஆனால், அட்ரசில்லாத அனாமத்து அனானிகளுக்கெல்லாம் தவறாம பதில் சொல்கிறார் இவர். ஒருவேளை தமிழ்மணியைப் போல இவரும் அனானியாக வந்து தனது தளத்தில் தானே பின்னூட்டமிட்டுக் கொள்கிறாரோ என்னவோ?!

இவரின் இருட்டடிப்புகளை வெளிக்கொண்டுவரும் வகையில் தொடங்கப்பட்ட இவ்வலைதளத்தில் வைக்கப்படும் கேள்விகளைக் கண்டுகொள்ளாதவர் போல் இருக்கும் இந்தக் கேனையை நாம் என்னவென்று சொல்வது?!

தமிழில் என்னன்ன வார்த்தைகள் இருக்குதோ, அம்புட்டு வார்த்தைகளையும் மொத்தமா பயன்படுத்தி இந்தாளோட சொரனையை நாம் விமர்சித்தாகிவிட்டது. மானமோ, ரோசமோ, சொரணையோ அறவே அற்ற இவனைப் பற்றி இனியும் நாம் பேசிப் பலனில்லை தோழர்.

நம்முடைய நெருக்கடி பொறுக்க மாட்டாமல் இவன் ஆர்.எஸ்.எஸ்.காரனுகளோட கூட்டனி அமைத்துக் கொள்கிறான். இன்னும் நெருக்கடி முற்றினால் சிபிஎம்மையும் விட்டொழித்துவிட்டு ராமகோபாலனின் அடியாளாக்கூட போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தோழமையுடன்,
ஏகலைவன்.