Thursday, September 17, 2009

சென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக.



அரங்கக் கூட்டம்

செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி

இடம்: தென்னிந்திய நடிகர் சங்கம்,
அபிபுல்லா ரோடு,
வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர்

தலைமை:

தோழர் அ. முகுந்தன்,
தலைவர் - பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை:

தோழர் பசந்தா
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,
நேபாள ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் மன்னராட்சியை அகற்றிய நேபாள மாவோயிஸ்ட் கட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் ஆட்சியிலிருந்து விலகியது ஏன்?

புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கான தடைகள் என்ன?

கூட்ட ஏற்பாடு:


இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்

தொடர்புக்கு:

அ.முகுந்தன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை-24
தொலைபேசி: 94448 34519

புதிய கலாச்சாரம் – 99411 75876

வினவு – 97100 82506

Wednesday, February 4, 2009

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ஈழத்தில் தமிழர்களை ஒழிக்க நேரடியாக தனது ராணுவத்தினரை இந்தியா அனுப்பியுள்ளது சமீபத்திய சம்பவங்களில் அம்பலமானது. இந்திய அதிகாரிகள் காயமடைந்தது, செத்து ஒழிந்தது உள்ளிட்ட செய்திகள் மற்றும் அணை கட்டு உடைந்த சம்பவத்தில் கணிசமான அளவு இந்திய ராணுவத்தினர் செத்து சின்னா பின்னமானது போன்ற செய்திகள் மற்றும் இது போன்ற தொடர் செய்திகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.விசயம் இப்படியிருக்கு CPM பாசிஸ்டுகளின் இணைய பிரசங்கி சந்திப்பு தனது தளத்தில் படு கேவலமான கருத்தை இட்டுள்ளார்:""இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது. """ (நன்றி: ஏகலைவன்)ஈழத்தில் சிங்கள இன வெறி அரசு மக்களை கொன்று குவித்து வருவது குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், நார்வோ போன்ற நாடுகளும் கூட சமீபத்தில் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் இந்த இணைய கோயபல்ஸ் CPM சந்திப்பு வாய் கூசாமல் பேசுகிறார். கேட்டால் இலங்கையின் இறையாண்மை போய்விடுமாம். போடாங்.....அப்படிப்பாத்தா குஜாராத் கலவரம் பற்றி பேசினால் குஜராத்தின் இறையாண்மை போய்விடும். இதே போல பாலஸ்தீனம், ஈராக் என்று எல்லா இறையாண்மைகளை பற்றியும் CPM தனது வாய், ஆசன வாய் உள்ளிட்டவற்றை மூடிக் கொண்டால் நமது வேலையாவது மிச்சமாகும்.மிகைப்படுத்தப்பட்ட செய்தியாம். எது 150 டாங்கிகள் சென்றதா அல்லது இந்தியா அங்கு நேரடியாக தனது ராணுவத்தினரையும், ஆயுதங்களையும், ராணுவ அதிகாரிகளையும் அனுப்பி யுத்தம் செய்து வருவதா? அல்லது இதோ இன்று 48 மணி நேர கெடு என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக மிச்ச மீதியுள்ள தமிழர்களையும் கொன்றொழிக்கும் வெறியுடன் எறிகணைகளை பொழிந்து வருவதா? எது மிகைப்படுத்தப்பட்ட செய்தி. மிகைப்படுத்தப்பட்ட விசயம் என்று ஒன்று இருந்தால் அது இனிமேலும் உங்களை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான். ஏனேனில் போலியாக கூட இருக்கும் அடிப்படையின்றி பாசிஸ்டின் குரலில் அப்பட்டமாக, வெட்கமின்றி பேசும் ஒருவனை, கட்சியை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான் மிகைப்படுத்தப்பட்டது.இந்த கும்பல் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல. ஈழத்தின் அவலத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நிலையை உருவாக்கும் வகையில் முத்துகுமார் தன்னை எரியூட்டி தனது எழுத்தை ஒளியூட்டிய தருணத்தில் அதற்கு மறுநாள் இவர்கள் நாடகம் நடத்தி களிப்புற்றுக் கொண்டிருந்தனர். அந்த வக்கிர நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து பகன்ற மாமாமனிதர் ஹிந்து ராம். CPMமும், சிங்கள இன வெறி கட்சி ஜேவிபியும், இந்து ராமும் இணையும் புள்ளி இதுதான். மக்களுக்கு பாசிசம். இந்த இந்து ராம்தான் ஈழம் என்ற வார்த்தையைக் கூட தனது பத்திரிகையில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தமிழீழ என்று ஆரம்பிக்கும் அமைப்புகளின் பெயரை சிங்கள தமிழ் என்று எழுதும் வக்கிர புத்திக்காரன். இவந்தான் சிங்கள இன வெறி அரசின் இந்திய கைக்கூலி அல்லது ஆசனவாய். இலங்கையில் கழியாமல் அஜீரமானதை இங்கு முடை நாற்றமெடுக்க நசுக்குபவன்.CPM கும்பல் கொள்கை முரன்பாடின்றி பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு காவடி தூக்கி வருகின்றனர். எனவேதான் தமது மாநிலத்தில் நந்திகிராமில் பன்னாட்டு தரகு முதலாளிகளுக்காக மக்களை சுட்டு பொசுக்குவதை செய்த இவர்களால், இந்திய தரகு முதலாளிகளுக்காக இலங்கை எனும் ஒரு நாட்டில் ஒரு இனத்தையே அழித்தொழிக்கும் யுத்தத்தை ஆதரிக்க முடிகிறது. கேட்டால் இறையாண்மை, ஜனநாயகம், சட்டம் என்று நல்லவன் போல பேசவும் முடிகிறது. மக்களின் மீது குண்டுகளும், துப்பாக்கிகளூம் பாயும் போது உனது சட்டமும், ஜனநாயகமும், இறையாண்மையும் எங்கே நக்கிக் கொண்டிருந்தது என்று நியாயமாக நாம் கேட்க வேண்டும். ஆனால் அப்படி கேட்க்கும் அளவு CPM கும்பல் தகுதியானவர்கள் அல்ல.இந்திய முதலாளிகளின் தெற்காசிய கனவுகளுக்கு ஈழத்தை சுடுகாடாக்காதே! இந்திய அரசே இலங்கையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்!! CPM கும்பலே உனது மோசடித்தனத்தை மூட்டை கட்டி வைத்துக் கொள்!!!

அசுரன்

மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...ஈழம்: இந்தியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தமிழ‌கத்தில் பிரச்சாரம்
ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள் சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?
ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

Thursday, January 22, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு



முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

நாள் : ஜனவரி 25, 2009,
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்



காலை அமர்வு காலை 10 - 1 மணி



கருத்தரங்கம்:

தலைமை : தோழர் அ. முகுந்தன்
மாநிலத் தலைவர்
புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி

சிறப்புரை:
தோழர் கவிஞர் துரை. சன்முகம்
மக்கள் கலை இலக்கியக்கழகம்

வழக்குரைஞர்: சி.பாலன்
உயர் நீதிமன்றம் பெங்களூரு

1-2 உணவு இடைவேளை




இரண்டாவது அமர்வு 2-5

சிறப்புரை :
சு.ப.தங்கராசு
மாநில‌ பொதுச்செயலாளர் பு.ஜ.தொ.மு

பா.விஜயகுமார்
மாநில‌ பொருளாலர் பு.ஜ.தொ.மு

நன்றியுரை:
தோழர் இல.பழனி


மாலை 6 மணி

பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சி‌‌

சிறப்புரை
தோழர் மருதையன்
பொதுச்செயலாளர் மக்கள் கலை இலக்கியக்கழகம்


இறுதியாக‌ மக்கள் கலை இலக்கியக்கழக மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி‌‌ நடை பெறும்

நடை பெறும் இடம் அம்பத்தூர் OT மார்கெட்
தொடர்புக்கு


அ. முகுந்தன்: 94448 34519, 94444 42374
பாண்டியன்: 9941175876


அனைவரும் வருக‌

நன்றி
சிறப்புத்தளங்கள்