Thursday, July 24, 2008

விடுத‌லையான‌ பின்னூட்ட‌ங்க‌ள் !

அடிமைத்த‌னத்தை வெறுக்கும்
அடிமையிடம் தான் சுயமரியாதை இருக்கும்,விடுதலை வேட்கையும் இருக்கும் .மன்மோகன் சிங் போன்ற மாமாப்பயல்களுக்கு உடலில் எந்த உணர்ச்சியுமே இல்லை என்பதை நாடே அறிந்து வருகிறது.எஜமானின் சாட்டை மீது மாளாக்காதல் கொண்டிருக்கும் இந்த அடிமைக்கு ஒவ்வொருமுறையும் ஆண்டையிடமிருந்து உத்தரவுகள் பிறக்கும் போது தான் உயிரே வருகிறது. அடிமையாக அல்ல,அடிமையிலும் கேடுகெட்ட அடிமையாக அமெரிக்க ஆண்டானுக்கு தொன்டூழியம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்துள்ள இந்த பிணத்திடம் போயி...
சுதந்திரம் என்கிற வார்த்தை எப்படி இனிக்கும் தெரியுமா?
இதோ இப்படி சொல்லுங்கள் ஐயா, சு‍-த-ந்-தி-ர-ம், சுதந்திர‌ம் என்று பாட‌ம் ந‌ட‌த்திக்கொண்டிருப்ப‌வ‌னை ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ நினைக்கிறீர்கள் ?

ம‌ன‌நிலை பிற‌ழ‌ வாய்ப்பே இல்லாத‌ ம‌ன்மோக‌னுக்கும் அதை ஒத்த மற்ற‌ பிற‌விக‌ளுக்கும் நிச்ச‌ய‌ம் அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒருவ‌ன் க‌ச‌ப்பான‌ எதிரி தான் ஆனால் நம்மைப்போன்ற ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு இது போன்ற‌ ஒருவ‌னை மறை க‌ழ‌ண்ட‌ ம‌ங்குனி என்று புரிந்து கொள்வ‌து ஒன்றும் சிர‌ம‌மான‌ காரிய‌ம் அல்ல‌.

இப்ப‌டி ஒருத்த‌ன் ரெண்டு பேர் இல்ல‌ ஒரு க‌ட்சியே ம‌ன்மோக‌னை அடிமைத்த‌ளையிலிருந்து மீட்க‌ அதாவ‌து ம‌ன்மோக‌னுக்கு எதிராக‌ க‌டந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது,வெளியே வந்த பிறகு அந்த முயற்சியின் தீவிரம் குறைந்தாலும் தற்போதும் அதே நோக்கத்தோடு தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் அவர்களின் தற்போதைய பேச்சுக்கள் காட்டுகிறது.‌ நான்காண்டுக‌ளாக‌ இட‌துசாரிக‌ளின் வ‌தைக‌ளை எல்லாம் தாங்கிக்கொண்ட‌ ம‌ன்மோக‌ன் த‌ன‌து வில‌ங்குக‌ள் உறுதியாக‌த்தான் பிணைக்க‌ப்ப‌டுள்ள‌ன‌ என்ப‌தையும்,த‌ன‌து சேவைக்கால‌ம் வெற்றியின் மூல‌ம் நீட்டிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து என்ப‌தையும் அறிந்துகொண்ட மறுகண‌‌ம் ஒன்றைச்சொன்னார் 'இட‌துசாரிக‌ள் என்னை அடிமை போல‌ ந‌ட‌த்த‌ முய‌ன்றார்க‌ள்,அவ‌ர்க‌ளிட‌ம் நான் அடிமையாக‌ இருக்க‌ வேண்டும் என்று விரும்பினார்க‌ள்' என்று வேதனையோடு த‌ன‌து குமுற‌லை வெளியிட்டார்.இவ்வளவு நடந்த பிறகு இப்போதும் கூட CPM வீர‌ர்க‌ள் விடுவ‌தாயில்லை.. ஒரொன்னு ஒன்னு.. ஈரொன்னு ரெண்டு என்று வாய்ப்பாட்டை துவங்கிவிட்டார்கள். "அணுச‌க்தி ஒப்பந்த‌‌த்திற்கு யாரிட‌மும் ஆத‌ர‌வு இல்லை எனவே காங்கிரசு இந்த ஒப்பந்தத்தை போடக்கூடாது" என்ற‌ வாய்ப்பாட்டை பாடியுள்ளார்கள்.

'அட‌ப்பாவி உங்க‌ளை திருத்த‌வே முடியாதாடா' என்று தான் கேட்க‌த் தோன்றுகிற‌து.
இவ‌ங்க கட்ச்சித்தலைவங்க‌ எப்ப‌டி சொன்ன‌தையே திரும்ப‌த்திரும்ப‌த் வாய்வலிக்காம‌ சொல்றாய்ங்க‌ளோஅதே போல‌த்தான் இவ‌ங்க‌ க‌ட்சியில‌ உள்ள‌ திருவாளர் ச‌ந்திப்பிலிருந்து அத்த‌னை பேரும் சொன்ன‌தையே ப‌ல‌ வ‌ருச‌மா சொல்லிக்கிட்ருக்காய்ங்க‌‌. ச‌ந்திப்பே தேவ‌லாம் போல, ச‌ந்திப்பை விட‌ அப்ப‌னுக்கு அப்ப‌னைப் போல‌ ஒரு ஆளு வ‌ந்திருக்கிறார் பேரு விடுத‌லையாம். ந‌ம‌து பிளாக்கில் ஒரே க‌மெண்டை திரும்ப‌த்திரும்ப‌ போட்டுக்கொண்டே இருக்கிறார்.ஒரு க‌ட்ட‌த்தில் என‌க்கு இவ‌ர் புத்தி பேத‌லித்த‌வ‌ரோ என்று கூட‌ தோன்றிய‌து.ஹிஸ்டீரியா வ‌ந்த‌வ‌னைப்போல‌ ஒரு சில‌ வார்த்தைக‌ளை ப‌ட‌ப‌ட‌ப்போடு ச‌லிக்காம‌ல் மீண்டும் மீண்டும் சொல்லி வ‌ருகிகிறார். இந்த‌ பிளாக்கில் அவ‌ருடைய‌ முத‌ல் ஹிஸ்டீரியா க‌மெண்ட் வ‌ந்து விழுந்த‌ போது அதை நான் இய‌ல்பாக‌ எடுத்துக்கொண்டேன்.பிற‌கு அவ‌ரை விவாதிக்க‌ அழைக்க‌லாம் என்று எண்ணி பொறுமையாக‌த்தான் அனுகினேன்.ஆனால் க‌ட்சியின் மேலேயிருந்து கீழே வ‌ரை எல்லாமே ‌ஒரொன்னு ஒன்னு.. பார்ட்டிக‌ள் தான் என்ப‌து ஏனோ பிறகு தான் புரிந்தது.

இவ‌ர் க‌மெண்டுக‌ளில் ப‌ல‌ வீர‌ வ‌சனங்களை பேசி ச‌வ‌டால் அடித்துள்ளார். ம‌.க‌.இ.க‌ வை ப‌ற்றிய‌ உண்மைக‌ளை அறிந்து கொள்ள‌ கார‌ப்ப‌ட்டுக்கு போய் பார்க்க‌ வேண்டுமாம்.
உண்மை தான்,வ‌ர‌த‌ராஜ‌னையும்,யுப்பி காம்ரேடு யெச்சூரியையும் கார‌ப்ப‌ட்டிற்குள் கால‌டி எடுத்து வைக்க‌ச்சொல்லு ந‌ல்லா பிஞ்சு போன‌ வெள‌க்குமாத்தாலேயே வ‌ர‌‌வேற்பு கிடைக்கும்.ம‌க்க‌ள் காத்துக்கொண்டிருக்கிறார்க‌ள்!

ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கார‌ப்ப‌ட்டிற்கு போக‌ச்சொல்வ‌து இருக்க‌ட்டும் இவர்களுடைய க‌ட்சியிலிருந்து ஒரு நாலு பேரு போயி 'கார‌ப்ப‌ட்டில் ந‌ட‌ந்த‌து என்ன‌' என்று ஒரு விள‌க்க‌ கூட்ட‌ம் போட்டு ந‌ட‌ந்த‌தை விள‌க்க‌ வேண்டிய‌து தானே அதை செய்ய‌ இந்த‌ பேடிக‌ளுக்கு துணிவில்லை மாறாக‌ ந‌ட‌ந்த‌தை அப்ப‌டியே திருப்பிப்போட்டு ஜெய‌ல‌லிதாவை விட‌ கேவ‌ல‌மாக‌ பெய் பேசுகிறார்க‌ள்.
பிற‌கு ந‌க்ச‌ல்ப‌ரி இய‌க்க‌ம் ப‌ற்றி தியாகுவின் ஒரு நேர்காண‌லை க‌மெண்டாக‌ போட்டிருக்கிறார்.

தியாகு என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறார் அதை வைத்துக்கொண்டு இந்த‌ ம‌ங்குனி என்ன‌ செய்ய‌ நினைக்கிறார் என்ப‌து ந‌ம‌க்கு ந‌ன்றாக‌ புரிகிற‌து. ந‌‌க்ச‌ல்ப‌ரி இய‌க்க‌ம் அத‌ன் வ‌ர‌லாறு எதையும் அறியாத‌ இந்த‌ முட்டாள் ந‌ம்மை ஆயுத‌ம் ஏந்தி போராடும் நக்சலிச அமைப்பு என்று கூறி த‌னிமைப‌டுத்த‌ நினைக்கிறது.மாவோயிஸ்டுக‌ளுக்கும் ந‌ம‌க்கும் என்ன‌ வேறுபாடு என்றெல்லாம் தெரியாமல் இவ‌ர் இதை செய்ய‌வில்லை அத்த‌னையும் தெரிந்து கொண்டு செய்யும் அயோக்கிய‌த்த‌ன‌ம் இது.

க‌டைசியாக‌ இவ‌ருடைய‌ க‌மெண்டுக‌ளை நாம் இருட்ட‌டிப்பு செய்துவிட்டோமாம் அதை உட‌னே போடு என்று ஒரு க‌மெண்ட். ஆமாம் ஆமாம் இவ‌ருடைய‌‌ க‌மெண்ட் வெளியானால் ம‌.க‌.இ.க‌ அப்ப‌டியே ம‌க்க‌ளிட‌ம் அம்ப‌ல‌ப்ப‌ட்டு போய்விடுமே அதனால் பயந்துபோனதால் தான் நாம் அதை இருட்ட‌டிப்பு செய்ய‌ முய‌ற்சித்தோம் க‌டைசியில் விடுத‌லை விடாப்பிடியாக‌ போராடிய‌தால் எங்கே அம்ப‌ல‌ப்ப‌ட்டுவிடுவோமோ என்று அஞ்சிப்போய் இப்போது வெளியிட்டுவிட்டோம்.அனைவரும் தயவு செய்து அந்த காமெடி பின்னூட்டங்களை மறக்காமல் வாசிக்கவும்.

கடைசியாக‌உன்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கென்றே 'ஆன்ட‌ன் செக்கவ்' ப‌ல‌ க‌த‌க‌ளை எழுதியுள்ளார் அதில் ஒன்று " கூண்டில் அடைபட்ட ம‌னித‌ர்" முத‌லில் அதையெல்லாம் ப‌டிச்சுட்டு வா அப்புற‌மா விடுத‌லையை ப‌ற்றியெல்லாம் பேசுவோம். அப்புற‌ம் உன்னுடைய‌ இது போன்ற‌ லூசுத்த‌ன‌மான‌ க‌மெண்டுகளையெல்லாம் இனிமேல் இங்கே போடாதே அவை இனிமேல் பிர‌சுரிக்க‌ப்ப‌ட‌மாட்டாது.

6 comments:

கலைவேந்தன் said...

அன்பார்ந்த தோழர்களுக்கு,

வழக்கம்போல சந்திப்பு தளத்தில் பதிப்பிக்காமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட எனது பின்னூட்டங்களை இங்கு தொடர்ச்சியாகப் பதிவிடவுள்ளேன். இத்தளத்தின் உரிமையாளர் இதனைத் தனித்தனிப் பதிவுகளாக வெளியிடுமாறும் கோருகிறேன்.

நன்றி!

தோழமையுடன்,


கலைவேந்தன் said...
Comrades...

the below mentioned comment is being sent to Santhipu's blogspot. He used to avoid publishing our comments if it opposes their politics. So, I ve sent such comment to your blog too.

Comradely,
Kalai.


தோழர் சந்திப்பு அவர்களுக்கும் மற்ற சிபிஎம் கட்சியினைச் சார்ந்து இங்கு கருத்து பதிந்துள்ள தோழர்களுக்கும்.....

சமீபகாலமாக மகஇக தோழர்கள் சிபிஎம் கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்களை முறையாக, தெளிவாக, அழுத்தமாக பதிந்து வருகின்றனர். அவர்கள் வைக்கின்ற விமர்சனங்கள் யாவும் சரியானவையாகத்தான் இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களை உங்களுடைய எதிர்வினைகளே நிரூபிக்கின்றன.

குறிப்பாக மகஇக வை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு உங்களுக்கு போதுமான அறிவு இல்லை என்பதே எனது கருத்து. சும்மா போகிற போக்கில் வசைபாடுவது, புழுதிவாறித் தூற்றுவது போன்ற செயல்களையும் அடக்கவொன்னா ஆத்திரத்தையும் தவிர உங்களது எதிர்செயல்களில் எதுவுமில்லை.

உதாரணமாக இங்கே நீங்கள் லிங்க் கொடுத்திருக்கும் வினவு வலைதளத்தின் கட்டுரையிலும் அதன் பின்னூட்டங்களிலும் முன்னிறுத்தப்பட்டுள்ள சிபிஎம் மீதான விமர்சனங்களுக்கு உங்களுடைய இந்த பதில் எதிர்வினையேதும் புரியவில்லை.

”கீரிப்பட்டி முதல் உத்தபுரம்வரை” ‘தலித்’ மக்களுக்காகப் போராடுவதாக சிபிஎம் பற்றி நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அதே பாப்பாபட்டிக்கு ‘உண்மை கண்டறியும் குழுவில் சென்று வந்த’ தமுஎசவின் முக்கியத் தலைவர் மேலாண்மை பொண்ணுச்சாமி என்பவர் தெரிவித்த கருத்து ஒன்றை அதே வினவு தளத்தின் பின்னூட்டமொன்றில் ஏகலைவன் என்பவர் பதிந்திருக்கிறார். அதற்கான உங்களது எதிர்வினை எங்கே? மேலாண்மை பொண்ணுச்சாமி சொன்னது உண்மைதானே?

அடுத்து அவர்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களில் கவனிக்க வேண்டியது சிபிஎம் கட்சியின் தேவர் அரசியல் தான்.

முத்துராமலிங்கம் என்கிற சாதிவெறியை ஊட்டி வளர்த்த ஒரு சமூகவிரோதியின் நினைவுநாளுக்கு எல்லா ஓட்டுக்கட்சிகளுடன் நீங்களும் போயி மலர்வளையம் வைத்து வழிபடுவது எந்த வகையிலான அரசியல்? முத்துராமலிங்கத்தை சிபிஎம் எந்த அளவு கோலில் அளந்து நியாயப்படுத்துகிறது?

சாதிவெறியன் முத்துராமலிங்கத்துக்கு மலர் வளையம் வைத்துவிட்டு சாதியை ஒழிக்கப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்வது எத்தனை கேவலமானது?

வினவு தளத்தில் பதியப்பட்டுள்ள, நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த பின்னூட்டத்தில் உள்ள கேள்விக்கு ஏன் உங்க்ளால் பதில்களைத் தரமுடியவில்லை, மாறாக ஆத்திரத்தையும் அவதூறுகளையும் பதில்களாகத் தெரிவிப்பது நேர்மையான அரசியல் அல்லவே!

///////வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்து வருவது பற்றி எந்த ஒருவிமர்சனமும் இல்லாமல், தலித்தியமா அதையும் சேர்த்துக்குவோம்; பெண் உடலை, காமத்தை வெளிப்படையாகப் பேசுவதும், ஓரினப்புணர்ச்சி மூலம் பெண்விடுதலை என்றும் பேசும் கழிசடை பெண்ணியவாதம் மேலெழுந்து வந்தால் அதையும் சேர்த்துக்குவோம்; இதுதான் த.மு.எ.ச.வின் கொள்கையாக உள்ளது ./////////

இவ்வரிகளும் அதே வினவு வலைதளத்தின் பதிவிலிருந்ததுதான். இதற்கு மறுப்பு சொல்லும் விதமாக உங்களது பதில் இருக்கிறதா என்பதை மறுபடியும் ஒருமுறை கவனித்துப் பாருங்கள்.

கடுமையாக வசைபாடிக்கொள்வதில் எனக்கு விருப்பமேதுமில்லை. இதில் இருதரப்பினரின் மீதும் எனக்கு அதிருப்தி உண்டு. அதே வேளையில் என்னுடைய இந்த பின்னூட்டத்தை முறையாகப் பதிப்பித்து நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் தோழர்களே திருத்திக் கொண்டு விவாதிக்கலாம்.

- கலைவேந்தன்.
elamperiyar@gmail.com

கலைவேந்தன் said...

முதலில் ஒரு விசயம், மகஇக ஒரு அரசியல் கட்சியும் அல்ல - புரட்சிகர அமைப்பும் அல்ல. அது நேரடி அரசியலிலும் ஈடுபடும் அமைப்பும் அல்ல. அது ஒரு கலை - இலக்கிய அமைப்பு அவ்வளவுதான்.

இப்படி ஒரு பிதற்றலை நான் உங்களைத்தவிர வேறு யாரிடத்திலிருந்தும் இதுவரை கேட்டதில்லை. பொதுபுத்தியிலுள்ள சாதாரண, கடைநிலை மனிதன்கூட இத்தனை அறிவிலித்தனமாக (மன்னிக்கவும் வேறு வழியில்லை) எழுதமுடியாது.

அரசியலும் கலை இலக்கியமும் வேறு வேறானவையா? தமுஎச வைத்திருக்கும் கலை இலக்கியத்திற்கு எந்த அரசியலும் இல்லை என்பதுதான் இங்கு பதியப்பட்டுள்ள முக்கியமான குற்றச்சாட்டு. அதன் பொருட்டான உங்களது பதில் தெளிவாக இல்லையே.

மகஇகவை புரட்சிகர அமைப்பு இல்லை என்று வரையறுப்பதற்கு முதலில் சிபிஎம் கட்சிக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?

தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறுவதும், சமூகவிரோத ஓட்டுப் பொறுக்கிக் கும்பலுடன் வெட்கமின்றி கூட்டனிகளைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைமுறையாகக் கொண்டுள்ள கட்சியில் இருந்து கொண்டு வேறொரு அமைப்பை “புரட்சிகர கட்சி இல்லை” என்று நீங்கள் விமர்சித்து வருவது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் வகையிலேயே இருக்கிறது.


ஆனால், இது தொடைநடுங்கி நக்சலிச அமைப்பின் வாலாக செயல்படுகிறது என்பதுதான் என்னுடைய விமர்சனம். இதுவரை இந்த தொடைநடுங்கிகள் தங்களது கட்சி பெயர் இதுதான் என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்வரவில்லை. மேலும், அவர்களது அன்றாட அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் மகஇக பெயரிலேயே நடைபெறுகிறது. தங்களது அரசியல் கட்சியை வெளியே சொல்லுவதே கிடையாது. அதனால்தான் சொல்கிறோம் இது புரட்சிகர அமைப்பு அல்ல சீர்குலைவு அமைப்பு என்று. இதனை அரசியல் ரீதியாக இப்படித்தான் விமர்சிக்க முடியும். அடுத்து, இது ஒரு என்.ஜீ.ஓ. அமைப்பு என்பதே என்னுடைய விமர்சனம். இதற்கான நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமா? கிடையாது!

இது முழுக்க முழுக்க முதலாளித்துவ கைக்கூலிகளின் மொழியாகும்.

வீழ்த்தப்பட வேண்டிய எதிரியைக் கொண்டு அரசியல் நடைமுறையை நேக்குகின்ற புத்தியினை உங்கள் கட்சி கொண்டிருக்க வில்லை என்பதனை இந்த பதில் தெளிவாகத் தோலுறிக்கிறது.

காந்தி வெள்ளையனின் கையிலிருந்த ஆயுதத்தைக் கண்டிக்காமல், எதிர்த்துப் போராடும் குழுக்கள் வைத்திருந்த ஆயுதத்தை மட்டும் கண்டித்த அசிங்கத்தைப் போன்றது இது. உங்கள் கட்சியினைச் சார்ந்த உறுப்பினர்கள் நந்திகிராம மக்களுக்கு எதிராக கடுமையான ஆயுதங்களுடன் பொறுக்கித்தனம் செய்யவில்லையா?

நந்திகிராம போராட்டம் வர்க்கப் போராட்டம் என்றால், சிபிஎம் எந்த வர்க்கத்துக்காக அன்று களத்தில் நின்றது. அது எதிர்த்து நின்ற வர்க்கம் எது?

நக்சல்பரி புரட்சியாளர்களை ஒழிப்பதற்காக அரசும் முதலாளீகளும் ஸ்பான்சர் செய்து நடத்தும் சல்வாஜூதும் என்கிற குண்டர்படையினை ஆதரித்து பேசும் உங்களுக்கு எந்த ஒரு நக்சல்பரி அமைப்பையும் விமர்சிக்கும் தகுதி இல்லை.

இதற்கெல்லாம் மேலாக,
மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும் தலைமறைவு அமைப்பு இல்லை என்று சொல்லி முகவரியினையும் தொடர்புகொள்ள வேண்டிய நபரையும் அவரது தொலைபேசி எண்களையும் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டுவருவது அனைவருக்கும் தெரியும்.

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்கள் காடுகளிலிருந்து வெளியிடப்படுவது கிடையாது. அவை தகுந்த முகவரியிலிருந்துதான் வெளியிடப்படுகிறது.

இங்கு பிரச்சினை வெளிப்படையாக இயங்குவதா அல்லது மறைமுகமாக இயங்குவதா என்பது அல்ல.
ஜெயலலிதாவின் பாதணிகளையும் கருணாநிதியின் பாதணிகளையும் கம்யூனிசத்தின் பெயரில் தாங்குவதா என்பதுதான் பிரச்சினை.

இத்தகைய அரசியல் அசிங்கத்தைக் கண்டிப்பவரை, தக்க பதில்களால் எதிர்கொள்ளாமல் அவர் தலைமறைவானவரா வெளிப்படையானவரா என்று நீங்கள் வைக்கும் பதில்கள் மிகவும் மலிவாக இருக்கிறது. உங்களது அறிவு நாணயத்தை அது கேள்விக்குள்ளாக்குகிறது தோழரே!

கலைவேந்தன் said...

கலைவேந்தன் said...
தமுஎச குறித்து அவர்களது கருத்து முற்றிலும் தவறானது. தமுஎச என்பது முற்போக்கு கலை - இலக்கிய கருத்துக்ளை தமிழகத்தில் பரவலான பாமர மற்றும் படித்த மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அது வருடத்திற்கு ஒரு பஜனை கச்சேரி நடத்தும் ம.க.இ.க. போல் செயல்படுவதில்லை. மாறாக தமுஎச மக்கள் மத்தியில் ஆழமாக வேறுன்றியுள்ளது. இது ஒரு வெகுஜ மேடை. இந்த வெகுஜன மேடையை கட்சி மேடையாக மாற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டுள்ளது ம.க.இ.க கும்பல். அதாவது. அதைதான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.


தமுஎசவை “மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது” என்றும் மகஇக நடத்துகின்ற தமிழ் மக்கள் இசைவிழாவை பஜனைக் கச்சேரி என்று மதிப்பிடுகின்ற அளவுக்கு உங்களது காழ்புணர்ச்சி மேலோங்கியிருக்கிறது. இதைத்தான் வெறும் வசைகள் என்றும், புழுதிவாரித்தூற்றுவது என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

உங்கள் அரசியலில் உள்ள தொய்வையே அது காட்டுகிறது. தமிழ் மக்கள் இசைவிழாவை நீங்கள் வழக்கமாக “கும்பமேளா” என்று குறிப்பிட்டு இழிவுபடுத்துவது வழக்கம். அதன் பிறகு அந்த ‘கும்பமெளா’வைப் பார்க்க வேண்டும் என்று எண்ணித்தான் மகஇக தோழர்களை நான் முதன் முதலில் அனுகினேன்.

அவர்கள் தமிழ் மக்கள் இசை விழாவின் நேரடி வீடியோவை எனக்குக் கொடுத்தார்கள். அதைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது தமுஎச நடத்துகின்ற கலை இரவுக் கூத்துக்கள், சினிமாக் கேவலங்கள் நிறைந்த மேடைகள் அனைத்தையும் குறித்து ஒரு நல்ல முடிவுக்கு வர முடிந்தது. இப்போது கலை (இழந்த) இரவு விளம்பரங்களைக் கண்டாலே குமட்டலெடுக்கிறது.

வெகுஜென இயக்கங்களுக்கு அரசியல் ஏதும் இருக்கக் கூடாது என்று நீங்கள் இங்கு புலம்புவதிலிருந்து தமுஎச குறித்த எனது மதிப்பீடு மேலும் உறுதியடைந்துள்ளது. இத்தகைய கேவலங்களைத்தான் தோழர் மதிமாறன் ஏற்கெனவே “தமுஎச லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற மனமகிழ் மன்றம்தான்...” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விவரத்தையறிய கீழ் கண்ட லிங்க்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
http://mathimaran.wordpress.com/2008/08/04/article104/

தமுஎச தொடர்பான எனது கேள்விக்கு சிபிஎம் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ‘திருவாளர்’டி.கே.ரெங்கராசன் அவர்கள் அளித்த பதிலைக் கீழ்கண்ட லிங்கில் சென்றால் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
http://mathimaran.wordpress.com/2008/10/09/article-127/

தோழர் சந்திப்பு அவர்களின் பதில்களைத் தொடர்ந்து பிற விடயங்களையும் குடைய வருகிறேன்.

எங்களது தோழர்கள் சந்திப்பின் மீது வைக்க்கின்ற முதன்மையான குற்றச்சாட்டு என்பது பின்னூட்டங்களை நேர்மையாகப் பதிப்பிப்பதில்லை என்பதுதான். ஆனால், எனது பின்னூட்டத்தை நேர்மையாக பதிப்பித்து விவாதித்துக் கொண்டிருக்கும் தோழர் சந்திப்பிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்...

- கலைவேந்தன்.

கலைவேந்தன் said...

கலைவேந்தன் said...
இறுதியாக நன்பர் கலைவேந்தர் அவர்களே! முடிந்தால் நீங்களே அவர்களது அரசியல் திட்டம் என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக - பகிரங்கமாக விமர்சிக்க முடியுமா என்று கேளுங்கள். உங்களையும் போலீசு உளவாளியாக மாற்றி விடுவார்கள்.


தோழர் சந்திப்பு அவர்களே,

அவர்களது கட்சித்திட்டத்தை நான் எளிமையாகப் புரிந்து கொள்ளவும், அதற்கெதிரான சிபிஎம் கட்சியின் (காங்கிரசுத்தனமான) அரசியலைப் புரிந்து கொள்ளவும் மிகவும் உதவியாக இருந்தது நீங்கள்தான். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன்.

திருமாவளவனையும் மாயாவதியையும் “வர்க்கப் போராளிகள்” என்று நீங்கள் வரையறுத்திருப்பதிலிருந்து உங்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளைத் தெளிவாக புரிந்து கொண்டேன். ’தலித்’ அரசியல் பேசுபவர்கள் எல்லோரும் பாட்டாளி வர்க்கத்தவர் என்று நீங்கள் குருட்டுத் தனமாக வரையறுப்பீர்களானால், பாஜக முதல் காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ்., என்று இந்தியாவில் இயங்குகின்ற அனைத்து அமைப்புகளுமே (நமது ஊத்தவாயன் சங்கராச்சாரி வரை) பாட்டாளி வர்க்கக் கட்சிகள்தான் தோழரே!

இக்கட்சிகளில் ‘தலித்’ அரசியலுக்கு ஆதரவாகப் பேசாத கட்சிகளைக் காட்டுங்கள் நாங்கள் தேரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

************

தன் சொந்த சமூகத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை வெறும் வாக்குவங்கிகளாக மட்டுமே கருதி அரசியல் நடத்துகின்ற ‘தலித்’ அமைப்புகள், எப்போதும் தன் சொந்த சமூகத்துக்கு எதிராகவே இயங்கிவருகின்றன. இதற்கான ஆதாரங்களை நாம் அன்றாட செய்திகளிலேயே தெரிந்து கொள்ளலாம்.

தான் சார்ந்த சமூகத்துக்கு எதிராக இயங்கிவருகின்ற இத்தகைய பிழைப்புவாதிகளை அச்சமூக மக்களிடத்தில் அம்பலப்படுத்தி அக்கட்சிகளை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப் படுத்துவதே புரட்சிகர அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருகிறது தோழரே!

இதெல்லாம் தேர்தலுக்குத் தேர்தல் அணிகள் மாறி சமரசம் செய்து கொள்ளத் துடிக்கும் உங்கள் கட்சிக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எனவே, கட்சித் திட்டம் குறித்த ஒரு தெளிவான புரிதலை எனக்குத் தந்த உங்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாவேன்.

கட்சித்திட்டம் சரியா, தவறா என்பதற்கு பிறகு வருவோம். தான் திட்டமிட்ட செயல் திட்டத்தை இலக்காகக் கொண்டு நேர்மையாக இயங்கிவரும் எமது அமைப்பைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், திட்டத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டு நடவடிக்கைகளில் அதற்கு எதிராக இயங்குகின்ற சிபிஎம் செயல்பாடுகள் குறித்து என்ன சொல்வீர்கள்?

டாட்டாவையும் டவ் கெமிக்கல்ஸ் (யூனியன் கார்பைடு) கம்பெனியும் சலீம் குழுமமும் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல் திட்டத்தில் எந்தப் பத்தியில் இடம் பிடித்திருக்கின்றன?

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் விஜயகாந்துக்கும் உங்களது கட்சித் திட்டத்தில் எத்தனைப் பக்கம் இடம் ஒதுக்கியுள்ளீர்கள்? இவர்களுக்கும் தீக்கதிர் பத்திரிக்கையில் முதல் பக்கத்தை ஒதுக்கித் தருவது போல கட்சித் திட்டத்திலும் இடம் ஒதுக்கியுள்ளீர்களா?

“நான் முதலில் பார்ப்பான்....” என்று சட்ட மன்றத்திலேயே அறிவிக்கும் அமைச்சரைக் கொண்டிருக்கும் உங்கள் கட்சி, அவருக்கு அக்கருத்தை எந்த திட்டத்தின் மூலமாகச் சொல்லிக் கொடுத்தது?

தொழிலாளர்களுக்கு எதிராக அரசானையைப் பெறுவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொடுத்து அம்பலப்பட்ட சிபிஎம் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்களின் தலைவரும், இந்நாள் வரை சட்டமன்ற உறுப்பினராக நீடிப்பவருமான ‘திருவாளர்’ திருப்பூர் கோவிந்தசாமி, கட்சியின் எந்த திட்டத்தின் படி இவ்வாறு நடந்து கொண்டார்?

என்பதையும் நீங்கள் சொல்வீர்களானால் நான் அதனைப் புரிந்து கொண்டு மற்ற அமைப்புகளின் திட்டம் குறித்து விவாதிக்க ஏதுவாக இருக்கும்.

எனது சிற்றறிவுக்கு உரைக்கும் படி நீங்கள் தெளிவாக பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் தோழரே! அதற்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் முன்கூட்டியே தெறிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

- கலைவேந்தன்.

இறுதியாக ஒரு குறிப்பு:

உங்களின் எழுத்துக்களில் சித்தாந்தத் தெளிவும் அரசியல் நேர்மையும் சிறிதும் இல்லாமல் இருக்கிறது. உங்கள் கட்சியின் அரசியல் குறித்து நான் ஏற்கெனவே மதிப்பிட்டிருந்ததை உறுதிப்படுத்தும் வகையிலும் அதைவிடக் கீழான கட்சியாக சிபிஎம் கட்சியை (அதாவது நான் மதிப்பிட்டிருந்ததைவிட) அடையாளப்படுத்தும் வகையிலும் உங்களது எழுத்துக்களே அமைந்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். இருப்பினும் நீங்கள் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத் தொடர்பாளரா இல்லையா என்பதையும் கொஞ்சம் உறுதிப் படுத்திவிடுங்கள். இல்லையென்றால் நீங்கள் எழுதியவற்றுக்கே உங்கள் கட்சியினைச் சார்ந்த வேறு யாராவது மறுப்பு எழுதிக் கொண்டிருக்கப் போகிறார்கள் பாவம்!

வாசகர்கள் குழம்பிவிடாமல் இருப்பதற்காகத்தான் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் தோழரே! தவறிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

கலைவேந்தன் said...

At 4:25 PM, விடுதலை said...
அன்ணே கார்வேந்தன் நீ என்னமோ யோக்கியன் மாதிரி பதில் சொல்ற மொதல்ல மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் என்ன?
உண்மையா உங்க கட்சி பெயர் என்ன?
கட்சி பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை


நண்பர் விடுதலை,

எங்களுடைய கட்சியின் பெயர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) - மாநில அமைப்புக் கமிட்டி.

உங்களுக்குப் பிரச்சினை கட்சியின் பெயர் என்ன, என்பதல்ல. ஏனெனில் எமது கட்சியின் பெயரில் மோசடியாக நீங்கள் ஒரு போலி வளைதளத்தைத் தொடங்கி அதில் விவாதிக்கத் திராணியில்லாத பல்வேறு அவதூறுகளைப் பதிந்து வருவதும் அனைவருக்கும் தெரியும்.

உங்களுடைய பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும் உங்களுடைய அரசியல் நேர்மையினையும் அறிவு நாணயத்தினையும் பற்றி. அது உங்களுடைய தனிப்பட்ட வெளிப்பாடு அல்ல. அதுதான் உங்கள் கட்சிக்கே உரிய பிழைப்புவாத மொழி. இத்தனைத் தகவல்களை நான் இங்கே பதிந்தபிறகும் உங்களுக்குள் இருக்கும் அற்பவாதம் உங்களை மீண்டும் மீண்டும் ஆட்காட்டி வேலை செய்யவே தூண்டுகின்றது என்றால், உங்களுடன் விவாதிப்பதற்கே அருவெறுப்பாக இருக்கிறது.

கேள்விகளுக்கு பதிலளிக்கச் சொல்லி நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுப்பதற்கு முன்னால் நீங்கள் அதனை உங்களுக்குள் முதலில் பொருத்திப் பாருங்கள். இதுவரை எந்த விமர்சனத்திற்காவது நாணயமாக பதில் சொல்லியுள்ளீர்களா விடுதலை? உங்களுடைய இயலாமையினை எண்ணி வெட்கப்படுங்கள்.

தோழர் சந்திப்பு,

என்னுடைய கடைசி பின்னூட்டம் ஒன்றை நீங்கள் இங்கே ‘எப்போதும் போல்’ பதிவிடாமல் மறைத்திருக்கிறீர்கள். அது மிகவும் அவமானகரமான விசயம். நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்திச் சொல்லிக் கொள்கிறேன், அதனையும் தயவுசெய்து பதிந்துவிடுங்கள்.

அது என்னிடம் சேமிப்பில் உள்ளது. உங்களுடனான எனது இவ்விவாதங்களோடு அப்பின்னூட்டத்தையும் சேர்த்து தனிப்பதிவாக எழுத வேண்டிய நிலையை எனக்கு உருவாக்கிவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களுடைய ஆள், விடுதலை எனும் நபரின் பிதற்றலைவிட மோசமான சொற்கள் எதுவும் எனது பின்னூட்டங்களில் இருக்கவே இருக்காது.

நாளைக்குள் உங்களுடைய நேர்மையினை மீண்டும் நான் சரியாக மதிப்பிட முடியும் என்று நம்புகிறேன்.

- கலைவேந்தன்.

கலைவேந்தன் said...

மதிப்பிற்குரிய தோழர் செல்வப்பெருமாள் அவர்களுக்கு,

நான் பல முறை வேண்டுகோள்கள் விடுத்திருந்தும் நீங்கள் நேர்மையாக எனது பின்னூட்டங்கள் சிலவற்றை இன்னும் பதிப்பிக்காமல் இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கும் மேலாக நீங்கள் மவுனம் சாதித்து வருவதால் இனியும் தாமதிக்க நான் தயாராக இல்லை.

நீங்கள் இழிவாகக் கடைபிடித்து வரும் செயல்களான மகஇக வின் மீது புழுதிவாறித் தூற்றும் போக்கு, போலிஸ்காரர்களுக்கு ஆட்காட்டி வேலை செய்வது, ‘நக்சலைட்’ என்று பீதியூட்டி தீக்கதிரில் எழுதுவது போன்ற செயல்களோடு, நான் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரிலேயே மோசடியாக வலைதளத்தை உருவாக்கி அவதூறுகளையும் பதிந்து வருகிறீர்கள்.

இந்நிலையில் உங்களை மேலும் கூடுதலாக கவனம் செலுத்தி உங்கள் கட்சியிலுள்ள நேர்மையான தோழர்களிடமிருந்து தனிமைப் படுத்த வேண்டும் என்கிற நோக்கில் கீழ்கண்ட வலைதளம் ஒன்றைத் தனிப்பட்ட வகையில் தொடங்கியிருக்கிறேன்.

வினவு தளத்திலும் பிற தோழர்களது தளங்களிலும் எமது பத்திரிக்கைகளிலும் அவ்வப்போது பதியப்படுகின்ற விமர்சனங்களைப் பார்த்தே தொடைநடுங்கிக் குமைந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த வலைதளம் கூடுதல் சவாலாக இருக்கும் என்பதனை மிகவும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் பதியப்பட்ட பல்வேறு சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களும் இத்தளத்தில் தொகுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். தமுஎசவில் என்னோடு பணியாற்றிய பல்வேறு தோழர்களின் ஆதரவோடுதான் இத்தளத்தைத் தொடங்கியிருக்கிறேன்.

விவாதங்களை நேர்மையாக பங்கேற்க பயந்து அவதூறுகளையும் வசவுகளையும் மட்டும் பதில்களாகத் தந்து என்னை இந்த வலைதளத்தைத் தொடங்க வைத்த உங்களுக்கும் (சந்திப்பு (எ) செல்வப் பெருமாள்), சிபிஎம் கட்சியின் யோக்கியதையை அப்படியே காட்டும் கண்ணாடியைப் போன்று இணைய பக்கங்களில் எழுதிவரும் ‘விடுதலை’ என்கிற ரமேஷ்பாபுவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- கலைவேந்தன்.
http://policommunists.blogspot.com/

இதுவரையிலான பதிவுகளின் தலைப்புகள் உங்கள் பார்வைக்காக.....

1. “போலி(கம்யூனிஸ்டு)கள்” தளத்திற்கான தேவை பற்றி...

2. பாசிஸ்ட் சிபிஎம் கட்சியும்! லெனின் சொல்லும் ஜனநாயகப் புரட்சியும்!!

3. அணுசக்தி ஒப்பந்த பேரம்! இந்திய-அமெரிக்க கூட்டுப்பயிற்சிக்கு சோரம்!! - போலிகம்யூனிஸ்ட் சிபிஎம்மின் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பாருங்கள்!!!

4. டாட்டாவும் ஆர்.எஸ்.எஸ்.சும் பங்காளிகள்! எதிர்த்துக் கேட்கும் புரட்சியாளர்கள் ஜென்ம விரோதிகள்!! - சிபிஎம் கட்சியின் ‘குண்டர் கொள்கை’....

இன்னும் இன்னும் தொடரும்.....